
கர்நாடகா மாநிலம் அங்கோலா பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி மத்திய ஆயூஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் காயம் அடைந்துள்ளார்.
தற்போதைய மத்திய அமைச்சரவையில் ஆயுஷ் அமைச்சராக இருப்பவர் ஸ்ரீபாத் யெசோ நாயக். அவர் பயணம் செய்த வாகனம் கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் அங்கோலா அருகே விபத்துக்குள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

விபத்தில் சிக்கிய ஆயுஷ் அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் அமைச்சரின் மனைவி விஜயா ஸ்ரீபாத் நாயக் இறந்துள்ளார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.