
எதிர் அணியினரை களத்தில் சீண்டுவதில் ஆஸ்திரேலியர்களுக்கு நிகர் ஆஸ்திரேலியர்களே…. முதல் டெஸ்ட் போட்டியில் பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாகி மோசமான தோல்வி அடைந்த பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அணியின் தோல்வியை தவிர்ப்பதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட நேரம் பேட்டிங் செய்து அணியை தோல்வியில் இருந்து தடுத்தார் … மூன்றாவது போட்டி டிரா ஆனது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ரவிச்சந்திரன் அஸ்வினிடம் ஆஸ்திரேலியர்கள் வழக்கம்போல் சீண்டினர்.
வெகுநேரம் பேட்டிங் செய்து கொண்டிருந்த அஸ்வினின் மன உறுதியை குலைக்கும் வகையில் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கும் காப்பாவுக்கு வா … ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறோம் என்று சீண்டினர்.. அப்போது ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்களிடம் இந்தியாவுக்கு வாருங்கள் இன்று பதில் அளித்தார் … உரையாடல் அப்போது ட்விட்டர் பதிவுகளில் பரபரப்பாக பேசப்பட்டது கம்இந்தியா என்ற ஹேஷ்டாக் பிரபலமானது…
அந்த வார்த்தைக்கு இப்போது காப்பாவில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்துள்ளது
இன்று இந்திய அணி பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஓர் இடம் பின்தங்கியது இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதலிடமும், இந்தியா 2 வது இடமும், ஆஸ்திரேலியா 3 வது இடத்துக்கும் தள்ளப்பட்டது.
33’வருஷ ஆஸ்திரேலிய சாதனையை முறியடித்தது இளம் இந்திய அணி… இது வேற லெவல் சாதனை! என்று இளம் இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

காப்பாவில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த், சுப்மன் கில் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை வெற்றி பெற செய்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 33 ஆண்டுகளில் காப்பா மைதானத்தில் தோல்வியையே கண்டிராத ஆஸ்திரேலியாவின் சாதனையை இந்த வெற்றி மூலம் இந்திய இளம் அணி முறியடித்துள்ளது.
இன்று ட்விட்டர் பதிவுகளில் அமித்ஷா முதற்கொண்டு பலரும் இளம் இந்திய அணியை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்
முக்கிய விளையாட்டு வீரர்கள் எவரும் இல்லாமல் இந்த வெற்றியை பெற்றிருப்பதுதான் அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்