

சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சசிகலாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
சிறை துறை அனுமதி அளிக்கும் பட்சத்தில் சசிகலா பெங்களூரில் உள்ள மனிபால் மருத்துவமனைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
முன்னதாக சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினர் இதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள சசிகலாவுக்கு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
சசிகலாவிற்கு கொரோனா உறுதியானதை அடுத்து இளவரசிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
இரண்டு பெண் அதிகாரி உட்பட 8 பேருக்கு பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
பரிசோதனை முடிவு வரும்வரை அனைவரும் தனிமைப்படுத்தப் பட்டார்கள்.
சசிகலாவுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கர்நாடக சிறைத்துறை இந்த முடிவு… எடுத்துள்ளது.