
கரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.
கரூர் மாவட்டம் அமராவதி பாலத்திற்கு அடியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதனை அடுத்து காவல் ஆய்வாளர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த கபாலி என்கிற லட்சுமணன் என்ற இளைஞரை கையும் களவுமாக போலீசார் கைது செய்து உள்ளனர்.
மேலும் அந்த இளைஞர் வைத்திருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இளைஞர் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்