
இன்றைய காலகட்டத்தில், யாரிடமும் வழி கேட்பதை விட வழிகாடும் மென்பொருள்களின் துணையோடு (Navigation) இலக்கை அடையவே மக்கள் விரும்புகிறார்கள். Google Map-ன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே காரணமாகும். ஆனால் வாகனம் ஓட்டும்போது கையில் மொபைல் வைத்துக்கொண்டு Google Map-ஐ நீங்கள் பயன்படுத்தினால் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளக்கூடும்.

பொதுவாக மக்கள் வாகனம் ஓட்டும்போது Google Map-ன் நேவிகேஷனை ஆன் செய்து பயன்படுத்துவது வழக்கம்தான். Google Map மூலம், நீங்கள் வழியைப் பற்றி அறிந்து கொள்வதோடு போகும் வழியில் இருக்கும் வாகன நெரிசல் பற்றியும் எளிதாக தெரிந்துகொள்ளலாம். இதனால் நாம் சரியான நேரத்தில் வேறு பாதையை தேர்ந்தெடுத்து, வாகன நெரிசலில் மாட்டிக்கொள்வதைத் தவுர்க்க முடிகிறது.
இவை அனைத்தும் Google Map-ன் நன்மைகளாக இருந்தாலும், இதில் சில குறைபாடுகளும் உள்ளன. உங்கள் காரில் டாஷ் போர்டில் நீங்கள் ஒரு மொபைல் ஹோல்டரை வைத்திருக்கவில்லை என்றால் பிரச்சனை ஏற்படலாம். ஹோல்டரில் வைக்கமால் கையில் ஃபோனை வைத்துக்கொண்டு நீங்கள் Google Map-ஐப் பார்த்தால், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் கட்டவேண்டி இருக்கலாம். இதற்கான ஒரு விதி உள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தில் இந்த அபராதத்திற்கான விதி உள்ளது
சமீபத்தில், தில்லி காவல்துறை (Delhi Police) டெல்லியில் ஒருவருக்கு இதற்கான அபராதத்தை விதித்தது. கார் டிரைவர் தான் யாருடனும் பேசவில்லை என்று வாதிட்டார். ஆனாலும் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொபைல் ஹோல்டருக்கு பதிலாக டாஷ்போர்டு அல்லது கையில் பிடித்து Google Map-ஐப் பயன்படுத்துவது போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஏனெனில் அவ்வாறு செய்வது வாகனம் ஓட்டும்போது கவனத்தை சிதறடிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். இந்த வழக்கு கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதலுக்கான (Driving) பிரிவின் கீழ் வருகிறது.
வாகனம் ஓட்டும்போது நீங்கள் Google Map-ஐப் பயன்படுத்த வேண்டுமானால், கண்டிப்பாக மொபைல் ஹோல்டரில் வைத்து பயன்படுத்துங்கள். மொபைல் ஹோல்டரில் தொலைபேசியை வைத்து Google Map-ஐப் பயன்படுத்துவது வாகன விதிச் சட்டத்தின் மீறலாக கருதப்படுவதில்லை.
மொபைல் ஹோல்டர் வைக்க பைக்குக்கு 200 ரூபாய் வரையும் காருக்கு 1 ஆயிரம் ரூபாய் வரையும் செலவாகும். நீங்கள் மொபைல் ஹோல்டரை உங்கள் வாகனத்தில் பொருத்திவிட்டால், அதிகபட்சமாக 1 ஆயிரம் ரூபாய் செலவில் 5 ஆயிரம் ரூபாய்க்கான அபராதத்தைத் தவிர்க்கலாம்.