ஃபேஸ்புக்கில் அறிமுகமான பாகிஸ்தான் காதலி! இராணுவ ரகசியங்களை கூறிய வீரர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்
Akash 1 - 2026

பேஸ்புக் காதலிடம் இராணுவ இரகசியங்களை கசிய விட்ட இளம் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள இராணுவ வீரர் ஆகாஷ் மெஹரியா. 22 வயதான இவருக்கு பேஸ்புக் மூலம் ஒரு பெண் அறிமுகம் ஆகியுள்ளார். அந்த பெண் விரித்த காதல் வலையில் ஆகாஷ் மெஹரியா சிக்கியுள்ளார்.

அந்த பெண்ணிடம் சில இராணுவ இரகசியங்களை கசிய விட்டதாகவும், அந்த பெண் அதனை பாகிஸ்தான் இராணுவத்திற்கு விலைபேசி விற்றுள்ளார் என சிஐடி சிறப்பு போலீசார் ஆகாஷ் மெஹரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் இது போன்ற ஏஜென்ட்டுகள் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் காதல் வலை வீசி இரகசியங்களை வாங்கி விற்பனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சபலம் கொண்டவர்களை ஆபாச பேச்சு வீடியோ மூலம் கவர்ந்திழுத்து
ராணுவ ரகசியங்களை கைப்பற்றுகிறார்கள்.

அதனால் பொய்யான ஃபேஸ்புக் ஐடி மேலும் பொய்யான தகவல்களின் மூலம் எதிரி நாட்டிலிருந்து இந்திய நாட்டின் ராணுவ ரகசியங்களை அறிய முயல்வதாகவும் இதற்கு சபலப்பட்டு நம்நாட்டின் ரகசியங்களை வெளியில் விடாமல் இருக்கவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.