நடிகர் விஜய் தேவரகொண்டா, வாழ்வின் கடைசி தருணத்தில் இருந்த ரசிகருடன் வீடியோ கால் பேசி அவரின் ஆசையை நிறைவேற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகரான ஹேமந்த் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ள சமயம் தனது விருப்பமான நடிகர் விஜய் தேவரகொண்டாவைச் சந்திக்க வேண்டும் என்பது அவரின் கடைசி ஆசையாக இருந்துள்ளது. இதுபற்றி அறிந்த விஜய், உடனே அவரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அந்த ரசிகருடன் வீடியோ காலில் பேசி, அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றியுள்ளார் விஜய் தேவரகொண்டா. விஜய் தேவரைகோண்டாவின் ஆடை பிராண்ட் ஆன ரவுடி உடைகளில் இருந்து தனக்கு டீ-சர்ட் அனுப்புமாறு அந்த ரசிகர் கேட்டுக்கொண்டார்.
விஜய்யும் உடனடியாக டீ-ஷர்டுகளை அவருக்கு அனுப்பியுள்ளார். மேலும் கொரோனா நிலைமை சரியானதும் ஹேமந்தை நேரில் சென்று சந்திக்கவும் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக தற்போது அந்த ரசிகர் உயிருடன் இல்லை. தனது ரசிகரின் இழப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
“ஐ மிஸ் யூ ஹேமந்த். நாம் இருவரும் பேசியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்கள் இனிமையான புன்னகையைப் பார்க்கவும், உங்கள் அன்பை உணரவும், உங்களுக்கு சிலவற்றைக் கொடுக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என் கண்களில் கண்ணீருடன், இப்போது உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்.
என்னைத் தொடர்பு கொண்டு இந்த இனிமையான சிறு பையனுடன் என்னை பேச வைத்த அனைவருக்கும் நன்றி.’ என்று ரசிகருடன் வீடியோ கால் பேசிய புகைப்படத்தையும் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பார்ப்போரது கண்களைக் கலங்கச் செய்கிறது.
I miss you Hemanth
— Vijay Deverakonda (@TheDeverakonda) May 1, 2021
I am so glad we spoke,
And I got to see your sweet smile, feel your love and give you some.
With tears in my eyes, I am saying a prayer for you right now 😢
Thank you to everyone who reached out to me and connected me to this sweet little boy.. pic.twitter.com/zWFKMEZIAa