திருப்பதி ஏழுமலையானுக்கு விதவிதமான நைவேத்தியங்கள், வாரத்தின் அடிப்படையில் படைக்கப்படுகின்றன.
அவருக்கு பிடித்த லட்டு, சர்க்கரைப் பொங்கல் போன்ற பிரசாதங்கள் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, அதன் பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
‘போட்டு’ என்றழைக்கப்படும் மடப்பள்ளியில் பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, பூச்சி கொல்லி மருந்து, உரங்கள் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கை விவசாய முறையில் தயாரிக்கப்பட்ட அரிசி, காய்கறிகள், வெல்லம், பருப்பு வகைகளை நைவேத்தியத்துக்கு பயன்படுத்த, கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி விஜயராம் என்பவர் 2,200 கிலோ எடையுள்ள இயற்கை விவசாய பொருட்களை காணிக்கையாக வழங்கினார்.
இவருடைய வேண்டுகோளுக்கு இணங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முதல் சோதனை அடிப்படையில் நைவேத்தியங்கள் மற்றும் லட்டு பிரசாதங்களை தயாரித்தது. இவை சுவாமிக்கும் படைக்கப்பட்டன. இதன் சுவை நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது.