16 வயதான பெண்ணை பலாத்காரம் செய்ததாக இரு ராணுவ வீரர்களை போலீசார் கைது செய்தனர்
உத்திர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸில் பத்தாம் வகுப்பில் படிக்கும் 16 வயதான பெண்ணொருவர் வசித்து வந்தார்.
அதே தெருவில் அவர் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் முகேஷ் என்ற ராணுவ வீரர் வசித்து வந்தார். அந்த முகேஷ் ஜோத்பூரில் ஜவானாக பணியாற்றுகிறார்.
அவர் இப்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு ராணுவத்தில் விரைவில் பணியில் சேரவுள்ள சௌரப் என்ற நண்பர் இருக்கிறார். இருவரும் இந்த விடுமுறை காலத்தில் ஒன்றாக இருந்தனர் .
கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த 16 வயதான பெண் தன்னுடைய தோழி வீட்டிற்கு சென்று விட்டு இரவில் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் தனியாக வருவதை அந்த தெருவில் வசித்த முகேஷும் அவரின் நண்பர் சௌரப்பும் பார்த்து விட்டனர்.
உடனே அவர்கள் இருவரும் அந்த பெண்ணை அதே தெருவில் இருக்கும் ஒரு காலி மனைக்கு இழுத்து சென்றனர்.
பின்னர் இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டனர்.
அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தரிடம் கூறியுள்ளார் அவர்கள் உடனே அந்த பெண்ணை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அந்த இரு நபர்கள் மீது புகார் கூறினார்கள்.
உடனே போலீசார் அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அந்த கிராமத்திற்கு விடுப்பில் வந்த முகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார், மற்றொரு குற்றவாளியான சவுரப் தப்பி ஓடிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.