கொரோனா: உபி அமைச்சர் விஜய் காஷ்யப் உயிரிழப்பு! பிரதமர் இரங்கல்!

இந்தியா சற்றுமுன்
vijay kashyab
vijay kashyab

உத்தரப்பிரதேசத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

முசாபர்நகரின் சர்தவால் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவும், உ.பி. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான விஜய் காஷ்யப்பிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் குர்கானின் மேடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். 56 வயதான அவர் தற்போது சிகிச்சைப் பலன்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் இழப்பிற்கு ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, ‘ பாஜக தலைவரும் உத்தரப் பிரதேச அமைச்சருமான விஜய் காஷ்யப் உயிரிழந்தது வருத்தமளிக்கிளிறது.

அடிமட்ட மக்களுடன் இணைப்பில் இருந்த அவர் மக்கள் பணியில் அர்ப்பணிப்புடன் இருந்தார். இந்தத் தருணத்தில்அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு உத்தரப் பிரதேச அமைச்சர்களான கமல் ராணி வருண் மற்றும் சேதன் சவுகான் கொரோனா தொற்றால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.