பீதி: இரவில் நடுரோட்டில் ஆடையின்றி சென்ற உருவம்! வைரல் வீடியோ!

இந்தியா சற்றுமுன்
Supernatural figure
Supernatural figure

ஜார்கண்ட மாநிலத்தின் ஹசரிபாக் பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக்கில் சென்றுகொண்டு இருந்தபோது சாலை ஓரத்தில் மனிதனைப் போன்ற உருவம் ஆடையில்லாமல் நடந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே பைக்கை நிறுத்திய அந்த இளைஞர்கள் நடந்து சென்ற உருவத்தை வீடியோ எடுத்தனர்.

பைக் லைட் வெளிச்சத்தில் வீடியோவாக பதிவு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலானதையடுத்து, இந்த வீடியோவை பார்த்த பலர் இது ஏலியன் எனவும், பேய் எனவும், பலர் இது கிராஃபிக் காட்சி எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோ குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

jarkant
jarkant

இந்த வீடியோ குறித்து அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளதாகவும், விசாரணை முடிந்த பின் உண்மை வெளிச்சத்திற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அது மனநல பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என பல நம்புகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.