jeyanthi - 2026

பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது (76)

பழம்பெரும் நடிகையான ஜெயந்தி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

எதிர்நீச்சல், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஜெயந்தி.

மிஸ் லீலாவதி என்ற கன்னட படத்தில் சிறுவயது பெண்ணாக சிறப்பாக நடித்து தேசியவிருது பெற்றார்.

தனது சிறப்பான நடிப்புக்காக 7 முறை கர்நாடக அரசின் விருதுகளை வென்றுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த ஜெயந்தி மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending