மணமேடையில் சடுகுடு ஆடி… போக்குக் காட்டி… ஒரு வழியா மாலைசூட்டி..!

Published:

wedding video bride playing kabaddi with groom video goes viral - 2026

மண மேடையிலேயே மணமகனை வியர்க்க விருவிருக்க ஓடவைத்த மணப்பெண்.

வீடியோவை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

திருமணங்களில் சில ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. மணமேடையில் மணமகனோடு சேர்ந்து ஓட்டப் பந்தயம் நடத்திய இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் அனைவரும் சிரித்து மகிழ்வோம்.

சோஷியல் மீடியாவில் விந்தையான வீடியோக்களின் வருகை ஊற்று போல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் திருமண வீடியோக்களே அதிகம். அதைத் தவிர சில வீடியோக்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் பெருக்கெடுக்கச் செய்பவையாகவும் இருக்கும். இப்போது நாம் பார்க்கப் போகும் வீடியோ கட்டாயம் அனைவரையும் சிரித்து மகிழ வைக்கும். அதில் ஐயமில்லை.

மணமகனை மேடையிலேயே வியர்க்க விருவிருக்க ஓட வைத்த இந்த மணப்பெண் குறித்து நெட்டிசன்கள் விளையாட்டாக பல கமெண்டுகளை வீசி வருகிறார்கள்.

இந்த வீடியோவில் மணமகனும் மணமகளும் மேடையில் ஆளுக்கு ஒரு பூமாலையோடு நின்றிருக்கிறார்கள். அதற்கிடையில் யாரோ வந்து மணப்பெண்ணின் காதில் ஏதோ சொல்லிவிட்டு போகிறார். முதலில் மணப்பெண் மணமகன் கழுத்தில் மாலை இடுகிறாள். மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் போது அங்கிருந்து பின்னால் நகர்ந்து தப்பித்துக் தப்பித்துக் கொள்கிறாள் பெண்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

மணமகன் ஓரடி முன்னால் வைத்தால் மணமகள் ஒரு அடி பின்னால் வைக்கிறாள். இதுபோன்ற கபடி விளையாட்டு நடந்தது. ஸ்டேஜ் முழுவதும் மணமகன் கையில் மாலையோடு அலைகிறார். ஒரு கட்டத்தில் மாலையைத் தூக்கி எறிந்து விட்டு மாப்பிள்ளை கோபத்தோடு மேடையிலிருந்து இறங்கி ஓடிவிடுவோரோ என்று கூடத் தோன்றுகிறது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவ்வாறு சோபாவுக்கு பின்னால் ஒளிந்திருந்த மணப்பெண்ணை தொடர்ந்து சென்று பல இன்னல்களுக்கு பிறகு அவள் கழுத்தில் மாலை இடுகிறார்.

இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரவலாக சுற்றி வருகிறது. இது நெட்டிசன்களை கவர்ந்ததோடு நிறைய காமென்ட்டுகளையும் பெற்று வருகிறது. நீங்களும் பாருங்கள்…

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img