ஐ.பி.எல் 2021 – வியாழக்கிழமை – 30.09.2021
சென்னை vs சன்ரைசர்ஸ்
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பூவாதலையா வென்ற சென்னை அணி ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை முதலில் மட்டையாடச் சொன்னது.
ஜேசன் ராய் நான்காவது ஓவரில் அவுட்டானார். ஏழாவது ஓவரில் பிராவோ பந்து வீச வந்தார்; கேன் வில்லியம்ஸின் விக்கட் விழுந்தது. எட்டாவது ஓவர் ஜதேஜா; ஒன்பதாவது ஓவர் தாகூர்; பத்தாவது ஓவர் மீண்டும் ஜதேஜா; பதினோறாவது ஓவர் மீண்டும் பிராவோ; பன்னிரண்டாவது ஓவர் மொயின் அலி; பதிமூன்றாவது ஓவர் மீண்டும் ஜதேஜா. இந்த ஏழு ஓவர்களில் ஒரு ஃபோர் அல்லது சிக்ஸ் அடிக்கப்படவில்லை.
விருத்திமான் சாகா (44), அபிஷேக் (18), அப்டுல் சமத் (18), ரஷித்கான் (17) ரன் எடுத்தனர். சன்ரைசர்ஸ் அணி இருபது ஓவரில் ஏழு விக்கட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாடும் (45) ட்யூப்ளசிஸும் (41) சிறப்பாக ஆடினர். அதன் பிறகு வந்தவர்கள் தடாலடியாக ஆட முடியவில்லை.
சன்ரைசர்ஸ் அணீயின் பவுலர்கள் நன்றாக பந்துவீசினர். இதனால் கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது. இறுதியில் சென்னை அணி வென்றது. சென்னை அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
அடுத்த அரையிறுதிக்கு சென்னை அணி தகுதி பெற்றுவிட்டது. இனிவரும் மூன்று ஆட்டங்களில் சென்னை அணியில் இதுவரை ஆடாத கிருஷ்ணப்பா கௌதம், சேதேஷ்வர் புஜாரா, ஜெகதீசன், ராபின் உத்தப்பா ஆகியோருக்கு ஆட வாய்ப்பளிக்கலாம்.