தேஹ வாஸனையின் அடுத்த வகை “தோஷ அபநய ப்ராந்தி” எனப்படும். இதன் பொருள், “அழுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்வது” என்பதாகும்.
இதுவும் சாஸ்த்ரியமானது மற்றும் லெளகிகமானது என்று இருவகைப்படும்.
செளசம் ச த்விவிதம் ப்ரோக்தம் பாஹ்யம் ஆப்யந்தரம் ததா
லெளகிகமான தூய்மை என்பது உடம்பிற்கு என்னவெல்லாமோ பொருட்களை வைத்துத் தேய்த்து அழுக்கு நீங்கும்படிச் செய்து கொள்வதாகும்.
“சாஸ்த்ரீயமான கர்மாக்களைச் செய்தால் சரீரத்தின் மலங்கள் போகும்” என்ற சிந்தனையுடன் செய்வது சாஸ்திரீயமான தோஷ அபநயம் ஆகும்.
இவை எல்லாவற்றிலும் ஒருவனுடைய நோக்கு, “சரீரத்தை நன்கு காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்பதே ஆகும்.
அதற்கான வழிகளிலேயே புத்தி செல்கிறதே தவிர அத்யாத்ம விஷயத்தில் செல்வதில்லை.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்