- Advertisements -
Home இந்தியா என் மகன் என்னை அழ வைத்தார்: நாகார்ஜூனா!

என் மகன் என்னை அழ வைத்தார்: நாகார்ஜூனா!

- Advertisements -
nagarjuna 1
nagarjuna 1

தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நாகார்ஜுனா. தமிழில் ரட்சகன், பயணம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவரின் மகன் நாக சைதன்யா. இவரும் திரைப்படங்களில் நடிக்க துவங்கி பல படங்களில் நடித்துவிட்டார். நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

தெலுங்கில் சிறந்த படங்களை இயக்கி வரும் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படம் தெலுங்கு சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

love 1
love 1
- Advertisements -

வழக்கமான மசாலா, பஞ்ச் வசனங்கள், சண்டை காட்சிகள், செண்டிமெண்ட் என வெளியாகும் தெலுங்கு பட ஃபார்முலாவை உடைத்து இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இப்படத்தை பார்த்த பல தெலுங்கு திரைப்பட பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். நடிகர் மகேஷ்பாபு சமீபத்தில் இப்படத்தை பெரிதும் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றிவிழாவில் பேசிய நாகசைத்தன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா ‘என் மகனை பற்றி என்ன சொல்வது!.. லவ் ஸ்டோரி படத்தில் நாக சைத்தன்யாவின் நடிப்பை பார்த்து நான் திருப்தி அடைந்துவிட்டேன்.

நடிகன், ஸ்டார் என்பது இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். நாக சைத்தன்யாவை சேகர் கம்முலா ஸ்டார் நடிகராக்கிவிட்டார். அதற்கு நன்றி.

சேகர் நீங்கள் அவரை புதிய பாதையில் அழைத்து சென்றுள்ளீர்கள். அதற்கு நன்றி. இப்படத்தில் நாக சைத்தன்யா சிறப்பாக நடித்துள்ளார். என்னை அழ வைத்தார். சிரிக்க வைத்தார்’ என பாராட்டியுள்ளார்.

- Advertisements -

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 − one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.