Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஇந்தியாசட்னி சாம்பாருடன் வைரலான குல்பி இட்லி!

சட்னி சாம்பாருடன் வைரலான குல்பி இட்லி!

- Advertisement -
- Advertisement -
gulfi idli
gulfi idli

நமது தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்றாகவும், வழக்கமாக நாம் சாப்பிடும் இட்லிக்கு கர்நாடக தலைநகரான பெங்களுருவில் புதிய வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது.

உணவு துறையில் பல புதுமைகள் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒரு சில புதுமைகள் மக்களை ஈர்க்கும், ஒன்றுக்கொண்டு தொடர்பே இல்லாத 2 உணவு முறைகளை இணைத்து, புதுமையான உணவை தயாரிப்பது இப்போது உணவு உலகில் ட்ரெண்டாக உள்ளது.

வினோதமான உணவு கலவைகளை பரிசோதிப்பது அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் பட்டர் சிக்கன் பானி பூரி மற்றும் மேகி மில்க் ஷேக் உள்ளிட்டவை ட்ரெண்டாகின.

இது மாதிரியான வித்தியாசமான கலவைகள் உணவுப்பிரியர்களை குழப்பும் சமீபத்திய வைரஸ் உணர்வாக மாறியுள்ளது.

இந்நிலையில் இட்லி மற்றும் சாம்பார், சட்னியின் சுவையான காம்போ பேக் தற்போது வினோதமான உணவாக மாற்றப்பட்டு உள்ளது.

சட்னி மற்றும் சாம்பர் உள்ளிட்ட சைட் டிஷ்ஷில் இட்லியை நனைத்து சாப்பிடும் வகையில், பெங்களூரில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட்டில் ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லி பரிமாறப்படுகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லியை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர் இந்த புதுமையை விரும்பும் அதே நேரத்தில் சிலர் இதை வெறுத்தும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இந்த புதுமை உணவு தொடர்பாக BrotherToGod என்ற யூஸர் ட்விட்டரில் போட்டோக்களை ஷேர் செய்து இருக்கிறார்.

ஐஸ்கிரீம் ஸ்டிக்கில் இட்லி எப்படி இணைக்கப்பட்டுள்ளதற்கான புதுமையான உணவு தொழில்நுட்பம். பெங்களூரு மற்றும் இந்த நகரத்தின் உணவு கண்டுபிடிப்புகள் எப்போதும் ஒரே மாதிரியானவை என்று குறிப்பிட்டு இருக்கிறார் இந்த யூஸர்.

இவர் ஷேர் செய்து இருக்கும் புகைப்படத்தில், 3 ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லிகள் ஒரு தட்டில் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அருகிலிருக்கும் சாம்பார் கிண்ணத்தில் ஒரு ஸ்டிக் இட்லி நனைக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படத்தில் இட்லியின் வழக்கமான காம்போவான தேங்காய் சட்னியும் உள்ளது.

வழக்கத்திற்கு மாறான இந்த இட்லி சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்த்து விவாதத்தை ஏற்படுத்தியது. ஒரு யூஸர் “பிற பகுதிகளை சேர்ந்தவர்கள் மரங்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள் மற்றும் மாற்று வழிகளை கண்டுபிடிக்கிறார்கள்,

ஆனால் படைப்பாற்றல் என்ற பெயரில் இங்கே சில நபர்கள் மர குச்சிகளை தேவையில்லாமல் வீணடிக்கிறார்கள்!”என்று விமர்சித்துள்ளார்.

ஒரு சில யூஸர்கள் வாவ் சூப்பர் கிரியேட்டிவ், மிகவும் நல்ல யோசனை என்றெல்லாம் பாராட்டியும் வருகிறார்கள்.

கேப்ஷன் இல்லாமல் இந்த புகைப்படத்தை பார்க்கும் சிலர் இது இட்லியாக இருந்தாலும் அல்லது சாம்பார் அல்லது சட்னியுடன் பரிமாறப்படும் குல்ஃபியா என்றும் சிலர் குழப்பமடைகிறார்கள்.

இதை வெளிப்படுத்தும் வகையில் ஒரு யூஸர், ஸ்டிக்கில் வெள்ளை நிற இட்லி இருந்தால் பரவாயில்லை! அது ஐஸ்கிரீம் என்றால் கடவுள் தான் இந்த உலகத்தை காப்பாற்ற வேண்டும், அழிவு அருகில் உள்ளது என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -