பூமியில் ஏராளமான விசித்திரமான தாவரங்கள் இருக்கிறது. வினோதமான தோற்றத்தில் இருக்கும் தாவரங்கள், மாமிசம் உண்ணும் தாவரங்கள் என்று பல வித்தியாசமான தாவரங்கள் பூமியில் உள்ளது.
அதேபோல், இணையத்தில் இப்போது தமிழில் “ஊது பாவை” என்று அழைக்கப்படும் மகரந்தத்தை வீசும் மருத்துவ தாவரம் பற்றிய ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இந்த பதிவை உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்கள் பார்வையிட்டதோடு சமூக ஊடக தளங்களிலும் ஏராளமானோர் இதைப் பகிர்ந்துள்ளனர். உண்மையிலேயே இப்படி ஒரு தாவரம் பூமியில் இருக்கிறதா? இது உண்மை தானா?
இணையத்தில் வைரல் ஆகும் ‘ஊது பாவை’ என்ற விசித்திரமான தாவரத்தின்
இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சந்தீப் திரிபாதி மற்றும் மனநல பேராசிரியர் டாக்டர் ராய் கல்லியலில் இருவரும் ட்வீட் செய்த பிறகு இந்த இந்தியச் சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்த்தது.
இந்த பதிவில் காட்டப்பட்டுள்ள தாவர இனங்கள் மருத்துவ பயன்களைக் கொண்டிருப்பதாக ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. தமிழில் இந்த தாவரத்தின் பெயரின் ‘ஊது பாவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மகரந்த தானியங்களை தன்னிலிருந்து வெளியேற்றும் தாவரம். இந்த ஊது பாவை தாவரம் மழை இருண்ட காடுகளில் மட்டுமே காணப்படுகிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவு, “தன்னை முழுமையாக வளர்த்துக்கொள்ள, இந்த தாவரம் அதன் மகரந்த தானியங்களை அவ்வப்போது அதன் புனல் போன்ற அமைப்பு மூலம் காற்றில் வீசுகிறது. உண்மையில், இந்த கடவுளின் படைப்பு நம்மை வியக்க வைக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இணையத்தில் வைரல் ஆகும் இந்த பதிவில் காணப்படும் ஊது பாவை தாவரம், பார்ப்பதற்கு மெல்லிய ட்ரம்பெட் போன்ற புனல்கள் கொண்ட இலைகளால் சூழப்பட்ட மூன்று அழகான சிவப்பு உயிரினங்களின் உருவத்தைக் காண்பிக்கிறது.
அதன் நுனியில் இருக்கும் புனல் போன்ற அமைப்பில் இருந்து மகரந்த தானியங்களைத் தாவரம் வெளியேற்றுவதை தெளிவாகக் காட்டுகிறது. இந்த தாவரத்தின் இலைகள் பலூன் போல ஒரு முறை காற்றில் ஊதி பின்னர் சுருங்கி மகரந்த துகள்களை வெளியேற்றுகிறது.
கார்க்-பாப்பிங் ஒலியுடன், பரந்த சுற்றுப்புறத்தில் அதன் மகரந்தத்தைப் புனல்களிலிருந்து காற்றில் வெளியே அனுப்புகிற காட்சியைப் பார்த்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த பதிவை உலகம் முழுக்க ஏராளமானோர் பார்வையிட்டதோடு, ஏராளமானோர் இதை மற்றவர்களுடன் ஷேர் செய்யத் துவங்கினர்.
குறுகிய காலத்தில் இந்த ஊது பாவை இணையத்தில் பேசும் பொருளாக மாறியது. இதை பார்வையிட்ட சில பயனர்கள் இது உண்மை அல்ல என்று வில் கமெண்ட் செய்ய துவங்கினர்.
இன்னும் சிலர் இப்படி ஒரு தாவரம் இல்லவே இல்லை என்றும் கூறியிருந்தனர். இதற்குப் பின்னர், உண்மையிலே இப்படி ஒரு தாவரம் இருக்கிறதா? இந்த பதிவு உண்மை தானா என்ற சந்தேகம் எழுந்தது.
மருத்துவ குணம் கொண்ட, தமிழில் ஊது பாவை என்று அழைக்கப்படும் இந்த ஊது பாவை தாவரத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை அறைந்த போது, இது மேலும் சில அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
இணையத்தில் வைரல் ஆகி வரும் ஊது பாவை தாவரத்தின் அசல் இல்லை என்பது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
யுஎஸ்ஏ டுடே ஆராய்ச்சியின் அடிப்படையில், இந்த வைரல் இடுகை உண்மையானது அல்ல. இது லண்டனைச் சேர்ந்த மோஷன் டிசைனர் மற்றும் 3 டி கிராபிக்ஸ் கலைஞர் லூக் பென்ரியால் உருவாக்கப்பட்ட சிஜிஐ அனிமேஷன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் இன்ஸ்டாகிராம் கைப்பிடிக்களில் அவரின் வாட்டர்மார்க் அச்சு காட்டப்பட்டுள்ளது. பென்ரி டிஜிட்டல் உருவாக்கம் எந்த மருத்துவச் செடியையும் அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதும் கண்டறியப்பட்டது.
சிஜி கலைஞர் தனது ஓய்வு நேரத்தில் உருவாக்கிய “டிஜிட்டல் பூஞ்சைகளின்” பல அனிமேஷன்கள் மற்றும் கிராபிக்ஸ்களில் இதுவும் ஒன்று என்பதை ஆராய்ச்சி குழு கண்டறிந்து உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த டிவிட்டரில் சிஜிஐயின் சுத்தமான அசல் படைப்பு என்பதை பென்ரி வலியுறுத்தினார். பென்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் உருவாக்கிய டிஜிட்டல் பூஞ்சை வேலைகளைப் பூஞ்சை இல்லாத டோக்கனாக விற்கிறார்.
பென்ரி தனது யூடியூப் சேனலில் இந்த டிஜிட்டல் பூஞ்சை வை வெளியிட்ட ஒரு நாள் கழித்து, செப்டம்பர் 21 ஆம் தேதி அன்று, அது தவறான பாசாங்கின் கீழ் பரவி வருவதை அறிந்திருக்கிறார்.
மேலும், அவர் ஒரு இணையதள பயனரின் மின்னஞ்சலைப் பெற்றதைத் தொடர்ந்து, விஷயம் எவ்வளவு வேகமாக தவறாகப் பரவி வருகிறது என்பதை பென்ரி அறிந்திருக்கிறார்.
உயிரியல் மாணவர் ஒருவர் அந்த வின் மூலையில் உள்ள பென்ரி வாட்டர்மார்க்கைப் பார்த்துவிட்டு, இது உண்மையானதா என்று கேட்டு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
இது ‘அபாயத்தின் விளிம்பில் உள்ள அரிய வகை தாவரம்’ என்று பதிவிடப்பட்ட ஒரு பதிவை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதை பென்ரி வேடிக்கையாகக் கண்டேன் என்று கூறியுள்ளார்.
ஏனென்றால், சாதாரண சிஜி வை கற்பனை கதை கட்டி, யாரோ ஒருவர் பார்வைகளைப் பெற வினோதமாக இதை ஒரு க்ளிக் பைட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது என்று பென்ரி கூறியுள்ளார்.
இதுபோன்ற போலியான தகவல்கள், மூன்றாம் நபரின் கற்பனை கலந்த பின்பு இணையத்தில் வைரல் ஆவது இது ஒன்றும் புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
This medicinal #plant,found only in dark rainy forests is called Oodhu Paavai in Tamil.
— Dr Roy Kallivayalil (@RoyKallivayalil) September 26, 2021
It blows out pollen grains periodically through its funnel like structure. pic.twitter.com/EDTqfbn5or