கொல்கத்தா அணி வெற்றி
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~
இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற எலிமினேட்டர் ஐபிஎல் கிரிக்கெட் மேட்சில் பெங்களூரு அணியும் கொல்கத்தா அணியும் விளையாடின. பூவா தலையா வென்ற பெங்களூரு அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தேவதத் படிக்கல், கோலி இருவரும் நன்றாக ஆடினார்கள்.
ஆனால் படிக்கல் ஆறாவது ஓவரிலும், அடுத்து வந்த பரத் பத்தாவது ஓவரிலும், பத்தாவது ஓவரிலும் கோலி பதிமூன்றாவது ஓவரிலும் அவுட் ஆனார்கள். அதன்பிறகு வந்த வீரர்கள் சரியாக விளையாடவில்லை. எனவே பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு நூற்றி முப்பத்தி எட்டு ரன் எடுத்தது.
அடுத்து விளையாட வந்த கொல்கத்தா அணி மிகச் சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர்களான கில், வெங்கடேஷ் இருவரும் தலா இருபத்தி ஒன்பது இருபத்தி ஆறு ரன்கள் எடுத்தனர். அவர்களுக்குப் பின்னர் வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வந்தனர்.
பதினோராவது ஓவர் முடிவில் வெங்கடேச ஐயர் அவுட்டானார். அப்போது விளையாட வந்த சுனில் நரேன் வரிசையாக மூன்று சிக்ஸர்கள் அடித்து கொல்கத்தா அணியின் டென்ஷனை குறைத்தார். அதற்குப் பிறகு திடீரென 18வது ஓவர் ஓவரில் நரேன் கார்த்திக் இருவரும் அவுட் ஆகினர். ஆனால் அதன்பிறகு விளையாட வந்த ஷாகிப் மற்றும் மோர்கன் இருவரும் நிதானமாக ஆடி கொல்கத்தா அணியை வெற்றிபெற வைத்தனர்.
இதனால் கொல்கத்தா அணி டெல்லி அணியோடு மீண்டும் ஒரு எலிமினேட்டர் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றது. பெங்களூரு அணி தோல்வியடைந்து போட்டியை விட்டு வெளியேறியது.