அம்பிகையின் மகிமை – 5
யா சாரதாம்பேத்யபிதாம் வஹந்தீ
க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி |
அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்தி
வித்யோததேsபீஷ்டவரான் திசந்தி ||
தாம் சாரதாம் நமாமி
(எவள் ‘சாரதாம்பாள்’ என்ற பெயரைப் பெற்றுள்ளாளோ, தான் செய்த பிரதிக்ஞையை (உறுதிமொழியை) காத்து வருகின்றாளோ, இன்றும் சிருங்கேரியில் வாழ்ந்து வருகிறாளோ அவள், (அனைவரும்) விரும்புவனவற்றையெல்லாம் அளித்துக்கொண்டு ஒளியுடன் திகழ்கிறாள். இத்தகைய அம்பாளைப் போற்றுகின்றேன்.)
, “க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி” என்று ஓர் அடி வருகிறது. பகவத்பாதாள் செய்த பிரார்த்தனையில் அம்பாள் திருப்தியடைந்து, “உமது பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நீர் எங்கு ஆசிரமத்தை ஏற்படுத்துகின்றீரோ, அங்கு நான் சாந்நித்யம் தருகின்றேன்” என்கிற பிரதிக்ஞையைச் செய்திருந்தாள். அந்தப் பிரதிக்ஞையை அவள் (இன்றும் என்றும் சிருங்கேரியில் வாழ்ந்து) காப்பாற்றிக்கொண்டு வருகிறாள்.
அதனால்தான் அவளைப்பற்றி, “க்ருதாம் ப்ரதிக்ஞாம் பரிபாலயந்தி| அத்யாபி ச்ருங்கேரிபுரே வஸந்தி” என்று சொல்லப்பட்டுள்ளது.