சிறந்த மருத்துவரைக் கொன்று போட்ட… ஊடகம், அரசியல்வாதி, போலிஸ் கூட்டணி!

dr archana sharma - 2026

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா சர்மா தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கே பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனால், மருத்துவர் அர்ச்சனா மீது ராஜஸ்தான் போலீசார் ஐ.பி.சி., 302ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் மன உளைச்சல் அடைந்த அர்ச்சனா மார்ச் 29 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார். அதில், எனது கணவரையும், குழந்தைகளையும் நான் மிகவும் நேசிக்கிறேன். என் மரணத்திற்கு பின் அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்தத் தவறும் செய்யவில்லை. யாரையும் கொல்லவில்லை. பிரசவத்தின் போது அதிக ரத்தப்போக்கு என்பது அனைவரும் அறிந்த சிக்கல். எனது மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கக்கூடும். அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள். அம்மா இல்லாத குறையை குழந்தைகளுக்கு உணரவிடாதீர்கள்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது இந்தக் கடிதம் சமூக ஊடகங்களில் பரவி ராஜஸ்தானில் பெரும் பிரச்னை ஆகியுள்ளது. வழக்கை தவறாகக் கையாண்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தவுசா மாவட்ட எஸ்.பி., இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.

இதனிடையே சமூகத் தளங்களில் தாதாத்தனம் செய்யும் அரசியல்வாதிகளையும் அவர்களுக்கு உடந்தையாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு அதிகாரபூர்வமாக குற்றம் செய்யும் ‘லைசன்ஸ்ட் கிரிமினல்’ போலிசாரையும் கண்டித்து கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. டாக்டர் அர்ச்சனா சர்மாவை போலிசாரும் ஊடகங்களும் தாதா அரசியல்வாதிகளும் சேர்ந்து கொன்று விட்டனர் என்று கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ஊடகங்களின் ஒருதலைப்பட்ச தீர்ப்பால், ஒரு சிறந்த மருத்துவரை நாடு இழந்துவிட்டதாக பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். #Justice_For_Dr_Archana என்ற டிவிட்டர் ஹேஷ்டேக் பிரபலம் அடைந்தது.

சிறந்த பெண் மருத்துவரை நாடு இழந்து விட்டது. போலிஸ் உடன் அதிகாரம் பொது வெளியில் மட்டும் தான். தான் நேரில் பார்க்காத, மருத்துவ முறை பற்றி சிறிதும் அறியாத போலீசார், ஆதாரமற்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கொலை குற்ற வழக்கு பதிவு மிகுந்த ஆபத்தானது. சேவை செய்ய மருத்துவர் அஞ்சுவர். அரசு மருத்துவமனையில் இறந்தால் இப்படி கொலை வழக்கு பதிவு செய்ய முடியுமா? SP சஸ்பெண்ட், ஆய்வாளர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். உறவினர்கள் அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.

மாமூல்? மற்ற வணிகர்களை மிரட்டி மாமூல் வசூலிப்பது போல இங்கும் மருத்துவமனை நடத்துபவர்களை மிரட்டி பணம் பறித்தல் நடக்கிறது. மாமூல் கொடுக்க மறுத்தால் இது போல பொய் குற்றம் சுமத்தி அடியாட்களை விட்டு போராட்டம் வழக்கு எனத்தூண்டி விட்டு மூடுவிழாவுக்கே ஏற்பாடு செய்து விடுகின்றனர். மரண வழக்கு வெளியில் தெரிந்தால் நோயாளிகள் வருகை குறைந்து விடுகிறது. ஸ்டெர்லைட்க்குப் பிறகு இது போன்ற தாதா வேலை மிகவும் அதிகரித்துள்ளது. நம்மிடம் டாக்டர் அதிகம் பிடுங்கி விடுவதாக புகார் அளிப்பவர்கள் அந்த கூடுதல் கட்டணத்தில் ஒரு பெரும் பகுதி அரசியல்வாதிகளுக்கு மிரட்டல் மூலம் மாமூலாக போவது தெரிவதில்லை. கடனாளியாகி மருத்துவமனையை அரசியல் தாதாக்களிடம் விற்று ஓடிய கதைகளும் உண்டு. இப்போதைய நிலையில் கார்பரேட் மருத்துவமனைகளைத் தவிர்த்து மற்ற மருத்துவமனைகள் நடத்தவே தடுமாறுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories