இடாநகர்: பிரதமர் நரேந்திர மோடி இன்று அருணாசலப் பிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்திலும் மகிழ்ச்சியுடன் தகவல் தெரிவித்துள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலம் உருவான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்கான விழா, தலைநகர் இடாநகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் விதமாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி, மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருணாசலப் பிரதேச மாநிலத்தின் பெரும்பகுதியினை சீனா தனக்குச் சொந்தமென உரிமை கொண்டாடி வருகிறது குறிப்பிடத்தக்கது. அருணாச்சல் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டவை:
Statehood Day greetings to the people of Arunachal Pradesh. pic.twitter.com/nLfAkqMSzo — Narendra Modi (@narendramodi) February 20, 2015
Wishing my sisters and brothers of Mizoram on the State’s Statehood Day. pic.twitter.com/wkx5kCl4P0 — Narendra Modi (@narendramodi) February 20, 2015