கழிப்பறை வசதி: சாவி ரயில் நிலைய அதிகாரியிடம் இருந்தால்…?

இந்தியா

toilet மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று மக்களவையில் 2015-2016ஆம் ஆண்டுக்கான ரயில்வே நிதி நிலை அறிக்கையினைத் தாக்கல் செய்தார். அப்போது, 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைக்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் குறைதீர் மையங்கள் அமைக்கப்படும். இதற்கான உதவி எண் 138 என்று அறிவித்த அமைச்சர், ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள தனித்துறை அமைக்கப்படும் என்றும், 650 ரயில் நிலையங்களில் பசுமைக் கழிப்பறைகள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார். 7 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில்வே கழிவறைகள் பயோ-டாய்லட்டுகளாக மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ரயில் நிலையங்களில் தூய்மைக்கான முன்னெடுப்புகள் மிகவும் அத்தியாவசியம்தான் என்றாலும், ரயில்வே நிலையங்களில் செயல்படும் கழிப்பறைகளைப் பூட்டி சாவிகளை ரயில் நிலைய அதிகாரிகள் வைத்திருந்தால், அவற்றின் பயன்பாடு பயணிகளுக்கு எப்படி உடனே சாத்தியமாகும் என்பது கேள்விக் குறிதான். தற்போதைய நடைமுறை அனைத்து ரயில் நிலையங்களிலும் மாற்றப்பட்டு, கொள்கை அளவிலான பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இந்தத் திட்டம் வந்தால் மட்டுமே அமைச்சரின் அறிவிப்பு பயன் தரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.