December 6, 2025, 12:01 PM
29 C
Chennai

IPL 2023: கடைசி ஓவர் குழப்பங்கள்!

ipl 2023 matches - 2025
#image_title

ஐ.பி.எல் 2023 – பதினோறாம் நாள் – 10.04.2023
கடைசி ஓவர் குழப்பங்கள்

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —

ஐ.பி.எல் 2023 தொடரின் பதினோறாம் நாளான நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் லக்னோ அணி வென்றது. பெங்களூரு அணியை (212/2, விராட் கோலி 61, ட்யூ ப்ளேசிஸ் 79, மேக்ஸ்வெல் 59, தினேஷ் கார்த்திக் 1) லக்னோ அணி (213/9, ஸ்டோயினிஸ் 65, நிக்கோலஸ் பூரன் 62, பதோனி 30, பார்னெல் 3/41, சிராஜ் 3/22, ஹர்ஷல் 2/48) 1 விக்கட்டு வித்தியாசத்தில் வென்றது.

சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த சீசனின் 15ஆவது லீக் போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று, பந்து வீச முடிவு செய்தது. பெங்களூரு அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய விராட் கோலி (44 பந்துகளில் 61 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ட்யூ பிளேசிஸ் (46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 79, 5 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் முதலில் இருந்தே தெறிக்கவிட்டனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி ஆட்டமிழந்த பின்னர் உள்ளே வந்த மேக்ஸ்வெல், பவுண்டரி சிக்ஸர்களாக பறக்கவிட்டு அரைசதம் கடந்து, 29 பந்துகளில் 59 ரன்களுக்கு (3 ஃபோர், 6 சிக்சர்) அவுட்டானார். ட்யூ பிளேசிஸ், மேக்ஸ்வெல் ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர். பெங்களூரு 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய லக்னோ அணியின் மேயர்ஸ் மற்றும் க்ருனால் பாண்டியா இருவரும் டக் அவுட் ஆகினர். தீபக் ஹூடா 9 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் 23/3 என லக்னோ அணி தடுமாறியது. உள்ளே வந்த ஸ்டாய்னிஸ் வெறும் 30 பந்துகளில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடித்து 65 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின் உள்ளே வந்த நிக்கோலஸ் பூரான் நிறுத்தாமல் சிக்ஸர் மழை பொழிந்தார். 15 பந்துகளில் அரைச்சதமடித்து, இந்த சீசனின் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். லக்னோ அணி கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டது என பலரும் எண்ணியபோது, சிராஜ் இவரது விக்கெட்டை எடுத்தார். நிக்கோலஸ் பூரான் 19 பந்துகளில் 62 ரன்கள் அடித்து அவுட்டானார். கடைசி 4 ஓவர்களில் 27 ரன்கள் லக்னோ அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது கட்டுக்கோப்பாக பந்துவீசி மீண்டும் ஆட்டத்திற்குள் திரும்பியது பெங்களூரு அணி. கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்றது கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டன.

முதல் பந்தில் ஒரு ரன், இரண்டாவது பந்தில் விக்கெட், மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள், நான்காவது பந்தில் ஒரு ரன் எடுத்து பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் ஸ்கோரை லக்னோ அணி சமன் செய்தது. இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டபோது, ஐந்தாவது பந்தில் ஹர்ஷல் பட்டேல் ஒரு விக்கெட் எடுத்தார். கடைசி பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி, இல்லையெனில் போட்டி சமன் என்று இருந்தது. அப்போது பந்து வீச ஓடிவந்த ஹர்சல் பட்டேல், பந்துவீசும் முனையில் நின்று கொண்டிருந்த ரவி பிஸ்னாய் விக்கெட்டை மேன்கடிங் முறைப்படி எடுக்கலாம் என்று முயற்சித்தார். ஆனால் ஸ்டம்பை அடிக்க தவறினார். அதன் பின்னர் பந்தை நான்-ஸ்ட்ரைக்கர் முனைக்கு ஸ்டெம்பை நோக்கி வீசினார். அதுவும் தவறியது. ஆனால் ஆட்ட விதிகளின்படி அப்படிச் செய்ய முடியாது.

ஏனெனில் ஏற்கனவே 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது லக்னோ அணி. இந்த விக்கெட் எடுத்திருந்தால் லக்னோ ஆல் அவுட் ஆகியிருக்கும். பெங்களூரு அணிக்கு ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கும். இதைத் தவறவிட்டு மொத்தமாக ஆட்டத்தை கோட்டைவிட்டது பெங்களூரு அணி. இதனால் ரசிகர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். கடைசி பந்தில் ஆவேஷ் கான் ஒரு ரன் அடித்துக்கொடுக்க, லக்னோ அணி வென்றது.

ஐ.பி.எல் புள்ளி அட்டவனை 2023 (10.04.2023 ஆட்டங்கள் வரை)

Team    M   W   L   Pt  NRR

1 லக்னோ 4 3 1 6 1.048
2 ராஜஸ்தான் 3 2 1 4 2.067
3 கொல்கொத்தா 3 2 1 4 1.375
4 லக்னோ 3 2 1 4 1.358
5 குஜராத் 3 2 1 4 0.431
6 சென்னை 3 2 1 4 0.356
7 பஞ்சாப் 3 2 1 4 -0.281
8 பெங்களூரு 3 1 2 2 -0.800
9 ஹைதராபாத் 3 1 2 2 -1.502
10 மும்பை 2 0 2 0 -1.394
டெல்லி 3 0 3 0 -2.092

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories