
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கரும்பு தோட்டத்தில் மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோட்ட உரிமையாளர் பெரிய கருப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஆவுடையப்பேரி மம்பட்டி பரம்பு காட்டு பகுதியில் சிவகிரி கருங்குளத்தைச் சேர்ந்த பெரிய கருப்பையா 64, என்பவருக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு பயிரை சுற்றிலும் அனுமதியின்றி மின் வேலி அமைத்திருந்தார்.
இரவுநேரத்தில் அங்கு வந்த ஆண் யானை மின் வேலியில் சிக்கி இறந்துள்ளது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கால்நடை மருத்துவர் மனோகர் தலைமையில் அங்கேயே உடற்கூறு ஆய்வு செய்து யானையை புதைத்தனர். மின் வேலி அமைத்த விவசாயி பெரிய கருப்பையாவை வனத்துறையினர் கைது செய்தனர்





