இந்தியா-வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – ஐந்தாம் நாள் – 01.10.2024
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
வங்கதேசம்
முதல் இன்னிங்க்ஸ் 233 (மோமினுல்107*, பும்ரா 3-50, ஆகாஷ் தீப் 2-43)
இரண்டாவது இன்னிங்க்ஸ் (146, ஷத்மன்50, பும்ரா 3/17, ஜதேஜா 3/34, அஷ்வின் 3/50)
இந்திய அணி
முதல் இன்னிங்க்ஸ் 285க்கு 9 டிக்ளேர்டு (ஜெய்ஸ்வால் 72, ராகுல் 68, மெஹிதி 4 -41, ஷகிப் 4-78),
இரண்டாவது இன்னிங்க்ஸ் மூன்று விக்கட்இழப்பிற்கு 98 (ஜெய்ஸ்வால் 51, கோலி ஆட்டமிழக்காமல் 29, மெஹிதி 2/44).
இந்திய அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
நான்காம் நாள் முடிவில் வங்கதேசம்2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்களுடன் இருந்தது. பும்ராவும் அஷ்வினும் இன்றுபந்துவீச்சைத் தொடங்கினர். இன்றைய முதல் வங்கதேச விக்கட் அஷ்வின் பந்துவீச்சில் விழுந்தது.அடுத்தவிக்கட் 28ஆவது ஓவரில் ஜதேஜவுக்குக் கிடைத்தது.
29ஆவது ஓவரில் அதுவரை சிறப்பாகஆடிக்கொண்டிருந்த ஷத்மன் ஆட்டமிழந்தார். 30ஆவது ஓவரில் லிட்டன் தாஸ், 32ஆவது ஓவரில்ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தனர். 37ஆவது ஓவரில் பும்ரா ஒரு விக்கட் எடுத்தார். 41ஆவதுஓவரில் மேலும் ஒரு விக்கட் எடுத்தார்.
47ஆவது ஓவர் கடைசி பந்தில் கடைசி விக்கட்டையும் பும்ரா எடுத்தார். வங்கதேச அணி 146 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 95 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐந்தாம் நாள் உணவு இடைவேளை வந்தது.
வங்கதேசம் இந்திய அணியின் விக்கெட்டுகளை எடுக்கும் வகையில் பந்து வீசாததால் இந்தியா மீண்டும் அனைத்து துப்பாக்கிகளையும் வெடிக்கச் செய்தது.
ரோஹித் முதல் ஓவரில் லெக் சைடுக்கு ஒருபெரிய ஸ்விங்கை தவறவிட்டார், அவர் ஒரு ஸ்வீப்பை மிடில் செய்தபோது, மெஹிடியின் இரண்டாவது ஓவரில் டீப் பேக்வர்ட் ஸ்கொயர்-லெக்கிடம் கேட்ச் கொடுத்தார்.
ஷுப்மான்கில் 6 ரன்களில் மெஹிடியால் எல்பிடபிள்யூவில் சிக்கினார், அதேபோன்ற ஒரு பந்து வீச்சில்திங்களன்று ரோஹித்தை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.
மற்றபடி தொடரில் ஜெய்ஸ்வாலின் மூன்றாவது அரை சதத்தால் இந்தியா அசத்தலாக இலக்கைத் துரத்தியது.விராட் கோலியுடன் 58 ரன்கள் எடுத்த அவரது விறுவிறுப்பான பார்ட்னர்ஷிப் இந்தியாவை ஏறக்குறைய வெற்றி காணச் செய்தது. ஆனால் அச்சமயத்தில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அப்போது வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
அதற்கடுத்த இரண்டாவது ஓவரில் ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றியை 18ஆவது ஓவரில் பெற்றுத் தந்தார்.
ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகவும் அஷ்வின் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.
உலக டெஸ்ட் தொடரில் புள்ளிப் பட்டியல்
அணி | மேட்சு | வெற்றி | தோல்வி | ட்ரா | புள்ளி | %
இந்தியா | 11 | 8 | 2 | 1 | 98 | 74.24 |
ஆஸ்திரேலியா | 12 | 8 | 3 | 1 | 90 | 62.50
இலங்கை | 9 | 5 | 4 | 0 | 60 | 55.56
இங்கிலாந்து | 16 | 8 | 7 | 1 | 81 | 42.19
தென் ஆப்பிரிக்கா | 6 | 2 | 3 | 1 | 28 | 38.89
நியூசிலாந்து | 8 | 3 | 5 | 0 | 36 | 37.50 |
வங்கதேசம் | 8 | 3 | 5 | 0 | 33 | 34.38 |
பாகிஸ்தான் | 7 | 2 | 5 | 0 | 16 | 19.05
மேற்கு இந்தியத் தீவுகள் | 9 | 1 | 6 | 2 | 20 | 18.52