இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் – முதல் நாள் – பெர்த்-22.11.2024– பும்ராவின் பந்துவீச்சால் சமாளித்த இந்திய அணி
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி முதல்இன்னிங்க்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன் (நிதீஷ் குமார் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல் 26, ஹேசல்வுட் 4/29, மிட்சல் ஸ்டார்க் 2/14, பேட் கம்மின்ஸ் 2/67, மிட்சல் மார்ஷ்2/12); ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 27 ஓவர்களில் 67/7 (அலெக்ஸ் கேரி ஆட்டமிழக்காமல்19, ட்ராவிஸ் ஹெட் 11, நதன் மெக்ஸ்வீனி 10, பும்ரா 4/17, சிராஜ் 2/17, ஹர்ஷித் ராணா1/33). இந்திய அணி 83 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஐந்து டெஸ்டுகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவில்பயணம் செய்து கொண்டிருக்கும் இந்திய ஆடவர் கிரிக்கட் அணி இன்று பெர்த் நகரில் தனதுமுதல் டெஸ்ட் ஆட்டத்தை விளையாடியது. இந்திய அணியின் அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவிற்குஆண் குழந்தை பிறந்திருப்பதால் அவர் இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா செல்ல வில்லை. எனவேஇன்றைய ஆட்டத்திற்கு ஜஸ்பிரித் பும்ரா அணித்தலைவராக செயல்பட்டார். அணியில் ஒருசுழல்பந்துவீச்சாளருக்கு மட்டுமே இடமிருந்தது; அதனால் அந்த இடத்தில் வாஷிங்க்டன்சுந்தர் விளையாடினார். ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்தர் ஜதேஜாஇருவரும் விளையாடவில்லை. சர்ஃப்ராஸ் கானுக்குப் பதிலாக தேவதத் படிக்கல்விளையாடினார். அவர் ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய ஏ அணியில்சிறப்பாக விளையாடியவர். இதுவரை ஐந்து முறைஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் விளையாடச் சென்றிருக்கும் அஷ்வின் ஒரு முறை கூட பெர்த்மைதானத்தில் விளையாடியதில்லை. ஆஸ்திரேலிய அணியில் நான்கு இடதுகை மட்டையாளர்கள் இருந்தபோதிலும்அஷ்வினை இன்று அணியில் சேர்க்கவில்லை.
பூவாதலையா வென்று இந்திய அணி முத்லில் மட்டையாடத்தீர்மானித்தது.இந்த பெர்த் மைதானத்தில் முதலில் மட்டையாடுபவர்கள் வெல்வது இதுவரை வரலாறு. இம்முறைஎன்னவாகும் எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்திய அணியின் மட்டையாளர்கள் இந்தடெஸ்டிலும் ரன் எடுக்கத் தவறினார்கள். ஜெய்ஸ்வால் (8 பந்துகள் பூஜ்யம் ரன்),தேவதத் படிக்கல் (23 பந்துகள் பூஜ்யம் ரன்), விராட் கோலி (12 பந்துகள்5 ரன்) என முதல் மூன்று விக்கட்டுகள் முதல் 17 ஓவருக்குள் விழுந்துவிட்டது. அதன் பின்னர்கே.எல். ராகுலும் (74 பந்துகளில் 26 ரன்) ரிஷப் பந்தும் (78 பந்துகளில்37 ரன்) கொஞ்சம் நிதானமாக ஆடினர். ஆனால் ராகுல் மூன்றாவது அம்பயரின் ஒரு தவறான முடிவால்கேட்ச் அவுட் ஆனார்.
ராகுலுக்குப் பின்னர் துருவ் ஜுரல்(20 பந்துகளில் 11 ரன்) வாஷிங்க்டன் சுந்தர் (15 பந்துகளில் 4 ரன்) சொற்ப ரன்களுக்குஆட்டமிழந்தனர். அதன் பின்னர் நிதீஷ் குமார்ரெட்டி (59 பந்துகளில் 41 ரன்) பந்துடன் இணைந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்ரிஷபிற்கு பந்து வீசுவது எப்படி என்பதற்கு பல திட்டங்கள் போட்டு வைத்திருப்பதாக ஆஸ்திரேலியபத்திரிகைகள் சொல்லின. இந்திய இன்னிங்க்ஸில் மூன்று சிக்சர்கள் அடிக்கப்பட்டன; பந்த்ஒரு சிக்சர், நிதீஷ் இரண்டாவது, பும்ரா மூன்றாவது. பந்த் அடித்த அந்த சிக்சர் ஒரு கண்கொள்ளாக்காட்சியாகும். உருண்டு பிரண்டு அவர் தனது பேட்டால் பந்தை எல்லைக் கோட்டிற்கு வெளியேதூக்கிப் போட்டார். இறுதியாக 49.4 ஓவரில் 150 ரன்னிற்கு இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும்இழந்தது.
ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது இன்னிங்க்சைவிளையாட வந்தபோது அவர்கள் பும்ராவிடமிருந்து அப்படியொரு வெறித்தனமான பந்துவீச்சை எதிர்பார்க்கவில்லை.அதிலும் ஸ்மித் ஆட்டமிழந்த அந்தப் பந்து; ஸ்மித்திற்கு என்ன நடந்தது எனத் தெரியும்முன்னர் ஆட்டமிழந்துவிட்டார். இன்றைய ஆட்டநேர முடிவிற்குள் ஆஸ்திரேலிய அணி 27 ஓவரில்ஏழு விக்கட் இழப்பிற்கு 67 ரன் எடுத்தது. அலக்ஸ் கேரி (19 ரன்) மற்றும் மிட்சல்ஸ்டார்க் (6 ரன்னுடன்) ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். நாதன் லியன் மற்றும்ஹேசல்வுட் இருவரும் ஆடவேண்டும்.
இந்திய மண்ணில் மட்டுமல்லாது வெளிநாடுகளில்இரண்டு அல்லது மூன்று நாள்களில் டெஸ்ட் மேட்ச் முடிந்தால் அதனைப் பார்க்க மக்கள் எப்படிஆர்வம் காட்டுவார்கள்?