அத்வானியை அவமதித்தாரா மோடி?

இந்தியா சற்றுமுன்

நேற்று திரிபுராவில் பிப்லாப் தேப் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானியை அவமதித்ததாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட அனைத்து தலைவர்களுக்கும் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தினார். ஆனால் அத்வானியை மட்டும் கண்டுகொள்ளாமல் அருகில் இருந்த முன்னாள் முதல்வரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு தன்னுடைய இருக்கையில் அமர்ந்தார். இதனால் அத்வானியின் முகம் அவமானத்தால் சுருங்கியது

மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த வீடியோவும் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி வருவதால் பாஜகவினர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.