ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநில நிதி அமைச்சராக இருப்பவர் ஹசீப் திரபு. இவர் அண்மையில் தில்லிக்குச் சென்றார். அப்போது, ‘காஷ்மீர் விவகாரம் அரசியல் தொடர்பானது அல்ல. அது சமுதாயம் தொடர்பான பிரச்னை’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணும் முயற்சியில் மக்கள் ஜனநாயகக் கட்சி ஈடுபட்டு வரும் நிலையில், அந்த கட்சியின் அமைச்சரே இவ்வாறு கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்கும் வகையில், நிதி அமைச்சர் பதவியில் இருந்து ஹசீப் திரபுவை முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று அதிரடியாக நீக்கினார்.