உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு பின்னடைவு

Published:

india - 2026

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் கருத்துக்கணிப்பின்படி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

இந்த கருத்துக்கணிப்பின் முடிவின்படி உலகில் மகிழ்ச்சியாக வாழும் மக்கள் உள்ள நாடு என்ற பெருமையை பின்லாந்து பெற்றுள்ளது. இதனையடுத்து நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இரண்டு முதல் ஐந்தாவது இடங்களை பெற்றுள்ளது

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு 133வது இடமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே கருத்துக்கணிப்பில் 122வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 11 இடங்கள் பின்னோக்கி நகர்ந்துள்ளது. ஊழல், பணவீக்கம், சமூக விடுதலை ஆகியவைகளை கொண்டே இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related articles

Recent articles

spot_img