காந்தியின் மூன்று குரங்குகளின் புதிய பரிணாமம் – எதிர்க்கட்சிகளின் தாஜா அரசியல்!

yogi adityanath - 2026
#image_title

அங்கே வங்கதேசத்திலே, ஒரு தலித் இளைஞரை உயிரோடு எரித்து விட்டார்கள்.  நீங்கள் எல்லாரும் காஸா பகுதியில் ஏதாவது நடந்தால் அதற்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்களே!!  ஆனால், உங்கள் வாயிலிருந்து ஒரு சொல்கூட வரவில்லை, ஏனென்றால் ஒரு தலித் இளைஞர், வங்கதேசத்தில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான், ஆனால், அந்த இளைஞரின் மரணத்திற்காக, ஒரு வார்த்தை உங்கள் வாய் உதிர்க்கவில்லை.  ஏனென்றால், நீங்கள் அவர்களை வாக்குவங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறீர்கள்.  நீங்கள் சொல்லவே மாட்டீர்கள்.  காஸாவிற்காக மெழுகுவர்த்தி ஊர்வலம் எடுத்துச் செல்வீர்கள்.  ஆனால் பாகிஸ்தானிலும் வங்கதேசத்திலும் இந்துக்கள் கொல்லப்பட்டால் பேசா மடந்தைகளாகி விடுவீர்கள்.   ஏனென்றால் கொல்லப்படுபவர், ஒரு இந்து, தாழ்த்தப்பட்டவர். 

காந்தியடிகளின் குரங்குகள் மூன்று இருந்தன.  காந்தியடிகள் அவற்றுக்கு உபதேசம் கூறியிருந்தார்.  தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே, மற்றும் தீயதைப் பேசாதே.  ஆனால் இன்று இண்டிக் கூட்டணியில் மேலும் 3 குரங்குகள் இணைந்து விட்டன.  பப்பு டப்பு மற்றும் அப்பு அவற்றின் பெயர்கள்.  பப்புவால் நல்லதைப் பேசவே முடியாது.  டப்புவால் நல்லதைப் பார்க்கவே முடியாது.  அடுத்து…. அப்புவால், உண்மையைக் கேட்கவும் முடியாது.

வங்கதேசத்தில் ஓர் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை அன்று மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார்.

எதிர்க்கட்சிகள் ‘தேர்ந்தெடுத்த விஷயங்களுக்கு மட்டும் கோபப்படுவதாகவும், தாஜா அரசியல் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அண்டை நாடுகளில் இந்துக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடக்கும்போது எதிர்க்கட்சிகள் மௌனமாக இருப்பதாகவும், அதே சமயம் சர்வதேசப் பிரச்சினைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் போராட்டம் நடத்துவதாகவும் யோகி குற்றம் சாட்டினார்.

“காசா பகுதியில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நீங்கள் கண்ணீர் வடிக்கிறீர்கள், ஆனால் வங்கதேசத்தில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டபோது உங்கள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை,” என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

எதிர்க்கட்சிகள் பிரச்சினைகளை ‘வாக்கு வங்கி மற்றும் தாஜா அரசியலுக்காக’ பயன்படுத்துகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார்.

பாகிஸ்தானும் வங்கதேசமும் உருவாக்கப் பட்டிருக்காவிட்டால், இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்திருக்காது என்று யோகிஜி கூறினார். “நீங்கள் காசாவுக்காக மெழுகுவர்த்தி பேரணிகளை நடத்துகிறீர்கள், ஆனால் பாகிஸ்தானிலோ அல்லது வங்கதேசத்திலோ ஒரு இந்து கொல்லப்படும்போது, ​​பாதிக்கப்பட்டவர் ஒரு இந்து, ஒரு தலித் என்பதால் உங்கள் வாய்கள் மூடப்படுகின்றன,” என்றார் அவர் .

சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

“எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து ஒரு கண்டனத் தீர்மானம் வர வேண்டும். நாங்கள் இந்த சம்பவத்தைக் கண்டிக்கிறோம், மேலும் வங்கதேச அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக எதிர்க்கட்சிகளையும் அவர் குறிவைத்து, அவர்கள் பங்களாதேஷ் நாட்டினருக்கும் ரோஹிங்கியாக்களுக்கும் ஆதரவளிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

“நாங்கள் வங்கதேசத்தவர்களை இங்கிருந்து வெளியேற்றி, ரோஹிங்கியாக்களுக்கு வெளியேற வழி காட்டும் போது, ​​அவர்களுக்கு ஆதரவாக வராதீர்கள். நீங்கள் அவர்களில் பலரை வாக்காளர்களாகப் பதிவு செய்து, ஆதார் அட்டைகள் கூட எடுத்துக் கொடுத்துள்ளீர்கள்,.. என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories