
பெங்களூரு: தனது கணவர் நடராசனின் இறுதி சடங்கில் பங்கேற்க, 15 நாள் பரோல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளிவந்தார் சசிகலா.
கணவர் நடராசன் மறைவைத் தொடர்ந்து, இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்திடம் 15 நாட்கள் பரோல் கோரி விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த நிர்வாகம், அவருக்கு 3 நிபந்தனைகளுடன் பரோல் வழங்கியது. இதை அடுத்து, சிறையில் இருந்து வெளிவந்தார் சசிகலா.
1 : எண் 12, பரிசுத்த மா நகர், தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு என்ற முகவரியில் மட்டுமே சசிகலா தங்க வேண்டும்.
2 : பரோல் காலகட்டத்தில் எந்த விதத்திலும் ஊடகங்களை சந்திப்பதோ அல்லது பத்திரிகையாளர்களிடம் பேசவோ கூடாது.
3 : பரோல் காலகட்டத்தில் அரசியல் ரீதியான சந்திப்புகளோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ கூடாது. #Sasikala #Parole #KarnatakaPrisons – என்ற மூன்று நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை நிர்வாகம்.
அதன்படி வெளியே வந்த சசிகலா, பின்னர் தஞ்சாவூர் நோக்கி பயணமானார்.



