
புது தில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறு என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மார்ச் 30க்குள் மேலாண் வாரியம் அமைக்க முடியாது என நான் கூறவில்லை என்றும் எங்கள் தரப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளன என்றும் செயலாளர் யு.பி.சிங் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு எங்கள் தரப்பில் அனைத்தும் நிறைவடைந்துள்ளன என்றும், அதற்கு மத்திய அமைச்சரவை தான் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் யு.பி.சிங்.
முன்னதாக, மார்ச் 30 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியமில்லை என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யுபி.சிங் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனால் தமிழகத்தில் அரசியல் மட்டத்தில் பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது.



