உண்ணாவிரதம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடியைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மிஸ்டர் ராகுல் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப் படுகின்றன.
இன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வந்தார். திருவிடவெந்தையில் நடந்த ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைத்தார். வழக்கமான தனது அலுவலகளைப் பார்த்துக் கொண்டே வந்தார். காலை முதல் சுறுசுறுப்பாக, சென்னையில் இறங்கியது முதல், ராணுவக் கண்காட்சியை தொடங்கி வைத்தது, பார்வையிட்டது, இரண்டு கூட்டங்களில் பங்கேற்றுப் பேசியது என வழக்கமான பணிகளினூடே, இன்று அவர் உண்ணாவிரதமும் இருக்கிறார். அதுதான் ஆச்சரியம்!
எந்தப் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அரசு தொடர்பான ராணுவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சியில் பேசினார். எங்கும் தன் உண்ணாவிரதம் பற்றி பேசவில்லை. அரசியல் கருத்துகளையும் சொல்லவில்லை.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த விடாமல் செய்த காங்கிரஸ் கட்சி, கூட்டத்தொடரையே முடக்கியது. இப்படி நாடாளுமன்றம் செயல்படாமல் போனதற்காக இன்று பாஜக ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்கிறது.
நாடாளுமன்றத்தை முடக்கிய காங்கிரஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக., எம்பி.,க்கள் தங்கள் தொகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக தானும் உண்ணாவிரதம் மேற்கொள்வதாகக் கூறிய மோடி, வழக்கமான தன் அலுவல்களை தொய்வின்றி மேற்கொள்வதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி, ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதனூடே தனது உண்ணாவிரதத்தை நிறைவேற்றுகிறார் மோடி.
அவரது இத்தகைய செயல்பாடுகளை குறைந்த பட்சம் கற்றுக் கொள்ளவாவது செய்யுங்கள் ராகுல் என்று, சமூக வலைத்தளவாசிகள் அறிவுரை கூறுகின்றனர்.
அவர்களில் ஒருவரின் டிவிட்டர் பதிவு இது….
Hello @RahulGandhi learn something.
PM @narendramodi redefining “FAST” shows it can be observed while serving the nation.While Pappu was busy in mere photo op and his slaves feasting on chole bature PM is in Chennai to inaugrate Def Expo 2018 #PMatDefExpo #FastWithPMModi pic.twitter.com/21Dc7qhOGj
— Naina 🇮🇳 (@NaIna0806) April 12, 2018
#PMatDefExpo
#FastWithPMModi