ஐரோப்பிய நாடுகளில் ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி முதல் கட்டமாக நேற்று ஸ்வீடன் சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃபென் நேரில் வந்து வரவேற்றார். விமான நிலையத்தில் கூடியிருந்த ஸ்வீடன் வாழ் இந்தியர்கள், பிரதமர் மோடியை உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர். அதில் இந்தியக் கலாச்சார முறைப்படி பெண் ஒருவர் மோடியை சங்கு ஊதி வரவேற்றார்.
சுமார் 30 ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் ஸ்வீடன் சென்றுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் பெரும் உற்சாகம் அடைந்தனர்.
ஸ்டாக்ஹோமில் இன்று நடைபெறும் இந்தோ-நார்டியாக் முதல் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட நார்டியாக் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த மாநாட்டின் போது, இந்தியாவுடனான வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பாக நார்டியாக் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
Landed in Stockholm. I thank Prime Minister Stefan Löfven for the warm welcome at the airport. @SwedishPM pic.twitter.com/nJuqebdiOr
— Narendra Modi (@narendramodi) April 16, 2018