கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க., இரட்டை இலை சின்னம் கேட்டு உரிய நேரத்தில் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
கர்நாடாகாவில் வரும் மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வாகுப்திவுக்கு பின்னர் மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 17ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது, இந்த தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் மூன்று அதிமுகவும் போட்டியிட உள்ளது. அதிமுக காந்தி நகர், ஹனூர், கோலார் தங்கவயல் (தனி) ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. காந்தி நகரில் எம்.பி.யுவராஜ், ஹனுரர் தொகுதியில் ஆர். பி. விஷ்ணு குமார், கோலார் தொகுதியில் மு.அன்பு ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.