இந்தியா, சீனா இடையிலான உறவில் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி அடிப்படையில் மறு ஆய்வு செய்யப்பட்டு தொலைநோக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில், சீன அதிபருடன் நடத்தப் படும் பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
President Xi and I will exchange views on a range of issues of bilateral and global importance. We will discuss our respective visions and priorities for national development, particularly in the context of current and future international situation.
— Narendra Modi (@narendramodi) April 26, 2018
சிக்கிம் எல்லையை ஒட்டிய டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலால் இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் வகையில் இரு தரப்பு மாநாடு சீனாவின் வுஹான் நகரில் இன்றும் நாளையும் இருநாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சீனா சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
தனது பயணம் குறித்து மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேச உள்ளேன். அப்போது, இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படும். குறிப்பாக, இப்போதுள்ள சர்வதேச சூழலில், இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பான தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் முன்னுரிமை வழங்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். மேலும் நீண்டகால அடிப்படையில் இந்தியா, சீனா இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பாக மறு ஆய்வு செய்யப்படும்” என கூறியிருந்தார்.