விமானத்தில் இனி பயணிகள் செல்போனில் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் செல்போன், லேப்டாப்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை. பிளைட் மோட் என்று இதற்காகவே செல்போன்களில் ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை ஆன் செய்துவிட்டு, போனில் விளையாடுவது என இருப்பார்கள். இனி, இதற்கு அவசியம் இல்லை. தற்போது செல்போன் பேச, இண்டர்னெட் பயன்படுத்த அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் கூறிய போது, விமானத்தில் செல்போன், இன்டர்நெட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து தற்போது புதிய விதிமுறைகள் உருவாக்கப்படும். அதன் படி டெலிகாம், விமான சேவை நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான சேவை வழங்கப்படும்.
முதல்கட்டமாக இந்திய வான்வெளியில் விமானத்தில் பயணிக்கும் போது, இண்டர்நெட், செல்போன் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.