மேம்பாட்டு பணிகளுக்காக இந்திய ரயில்வே டிக்கெட் இணையதளமான www.irctc.co.in இன்று இரவு 1045 முதல் நாளை அதிகாலை 5 மணி வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசர்வேஷன் உள்பட அனைத்து ஆன்லைன் சேவைகளும் நிறுத்தப்படும்.
இணையத்தளம் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் ஆகியவற்றில் பல்வேறு புதிய வசதிகளை இணைக்கவே, இணைய தள செயல்பாடுகள் ஆறு மணி நேரம் நிறுத்தப்பட உள்ளது. இருந்த போதும் கால்சென்டர், IVRS டச் ஸ்கீரின் மற்றும் 139 என்கொயரி சேவைகளை பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.