December 3, 2021, 12:23 pm
More

    10ஆம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் 100% தேர்ச்சி

    kerala - 1கேரளாவில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுக்க 4,41,403 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இன்று தேர்வு முடிவுகளை கேரள கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் வெளியிட்டார். தேர்வு எழுதியோரில் 4,31,162 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 97.84 ஆக உள்ளது. கடந்த ஆண்டு 95.98 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு முடிவுகளின்படி 34,313 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில தேர்ச்சி சதவீதத்தில் முதல் மூன்று இடங்களை முறையே எர்ணாகுளம், மலப்புரம், வயநாடு மாவட்டங்கள் பிடித்துள்ளன.

    517 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த ஆண்டு 405 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தன. அதோடு 629 அரசு உதவிப் பெறும் பள்ளிகளும், 389 சுயநிதி பள்ளிகளும் என இந்த ஆண்டு மொத்தம் 1,565 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டு 1,174 பள்ளிகளே 100 சதவீத தேர்ச்சியை பெற்றிருந்தன. தேர்வில் தோல்வியடைந்தவர்கள், மறுதேர்வுக்கு விண்ணப்பிக்க மே 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ப்ளஸ் 1 வகுப்பிற்கான மாணவ சேர்க்கையும் அதே தேதியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,105FansLike
    370FollowersFollow
    47FollowersFollow
    74FollowersFollow
    1,779FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-