பெண்கள் அணியும் ஆடைகளே பாலியல் தொல்லைகளுக்கு காரணம் என்று கூறுவது அபத்தமானது என்று இந்திய பாதுபாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லைகளுக்கு ஆடையே காரணம் என்றால் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஏன் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய வர்த்தக சம்மேளனம் & தொழில் கூட்டமைப்பு எப்ரடு செய்திருந்த விழாவில் பேசிய அமைச்சர், பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதை தடுக்க எந்த விதமான நடவடிகைகள் எடுக்கப்பட வேண்டும்? சில மக்கள் பெண்கள் அணியும் ஆடைகளே அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதற்கு காரணம் என்று தெரிவிக்கின்றனர். அப்படி என்றால், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ஏன் பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர்? என்று கூறினார்.
பெண்கள் பாதுகாப்புக்கு அதிக செயல்திறன் கொண்ட நடவடிக்கைகளை சட்ட அமைச்சகம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
பாலியல் சம்பவங்களில் 10ல் ஒரு சம்பவம் உறவினர், நன்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் மூலமாகவே நடத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதனால் சட்ட அமைச்சகம் அதிக செயல்திறன் கொண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.