இந்திய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் வருமான வரித்துறையை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்க உள்ள நிலையில், ப்தாமியில் ஆனந்த் சிங் ரிசார்ட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜ உறுப்பினர்களை போன்ற முட்டாள்கள் யாரும் இல்லை. நான் தங்கிய ரிசார்ட்டில் அவர்கள் வருமான வரிதுறை மூலம் சோதனை நடத்தியுள்ளனர். அவர்களுக்கு காமன்சென்ஸ் இருக்கிறதா? நான் தங்கிய ரிசார்ட்டில் பணத்தை விட்டு விட்டு செல்வேனா? வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று விடும் என்பது தெரிந்ததும், இதுபோன்று அவர்கள் செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.