கர்நாடகாவில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய சோதனையில் இரண்டு இடங்களில், 8 லட்சம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் எட்டு லட்சம் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் விருபகஷா வீட்டிலும், 30 ஆயிரம் ரூபாய் காங்கிரஸ் தலைவர் சாமித் மணியர் வீட்டிலும் கைபற்றப்பட்டுள்ளன.
நேற்று ராஜராஜெஸ்வரி நகர் தொகுதியில் அதிகளவில் போலி வாக்களார் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



