
கர்நாடக தேர்தலில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பிங்க் நிறத்தில் ஒரே மாதிரியாக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் முழுக்க முழுக்க பெண்களே தேர்தல் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களும் பிங்க் நிறத்தில் ஆடை அணிந்துள்ளனர். சஹி என பெயரிடப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடிகள் பெண் வாக்காளர்கள் இடையே பெருமளவு வரவேற்பை பெற்றுள்ளளன.
கர்நாடக சட்டமன்றத்தின் 223 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் காலமானதையடுத்து அங்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் கர்நாடக போலீசாருடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படையினர் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் 15ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.



