பிரபல சாமியார் பாபா ராம்தேவ், லண்டனில் ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வாலை சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “லண்டன் பயணத்தின்போது அனில் அகர்வாலை சந்தித்து பேசினேன். லட்சக்கணக்காண வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் தேசத்தை கட்டமைப்பதில் அவருடைய பங்களிப்பிற்கு மரியாதை செய்கிறேன். தென் இந்தியாவில் உள்ள வேதாந்தா ஆலைக்கு எதிராக அப்பாவி மக்கள் மூலம் உலகளவிலுள்ள சதிகாரர்கள் கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். தொழிற்சாலைகள்தான் தேசத்தினுடைய வளர்ச்சிக்கு கோயில்கள். அவைகளை மூடக்கூடாது,” என பதிவிட்டுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கக் கூடாது: பாபா ராம்தேவ்
Popular Categories



