கேரளத்தில் பெய்த கனமழை, பெருக்கெடுத்த வெள்ளத்தில் பல சிற்றூர்கள், நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இயற்கை பூத்துக் குலுங்கிய அழகிய பிரதேசங்கள் என கண்களுக்கு பசுமையாய்க் காட்சி அளித்த இடங்கள் பலவும் வெள்ளத்தில் கடும் சேதத்தை சந்தித்துள்ளன.
பெரியார் ஆற்றின் துணை நதியான செருதோணி ஆற்றின் கரையில் உள்ளது செருதோணி நகர். கேரளத்தின் இரண்டாவது பெரிய நீளமான ஆறு செருதோணி ஆறுதான்! இடுக்கி அணைக்கு செருதோணி அணைக்கும் அருகில் உள்ள ஊர். செருதோணியில் மலையாளிகளை விட தமிழர்களே அதிகம்! தமிழர்களுடன் கணிசமான சீக்கியர்களும் இங்கே தோட்டத் தொழிலாளர்களாக வந்து ஊரை அழகு படுத்தியிருந்தனர்.
இந்த நகரின் வெள்ளத்துக்கு முன்பும் பின்புமான புகைப்படம், பார்ப்பவர் நெஞ்சை வேதனை கொள்ளச் செய்திருக்கிறது.




