கிரிக்கெட்: இந்திய ‘ஏ’, ‘பி’ அணியில் இடம் பிடித்த அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ்

விளையாட்டு

03 Aug 23 Ambathi raydu - 2026

இந்தியா ‘ஏ’, இந்தியா ‘பி’, ஆஸ்திரேலியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான இந்தியா ‘ஏ’ மற்றும் இந்தியா ‘பி’ அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

‘ஏ’ அணியில் சித்தேஷ் லாட், ‘பி’ அணியில் ரிக்கி புய் ஆகியோர் இடம்பிடித்திருந்தார்கள். தற்போது துலீப் டிராபி அணிக்கு செல்ல இருப்பதால், இவர்கள் இருவருக்கும் பதில் அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அம்பதி ராயுடு ஏற்கனவே இங்கிலாந்து சென்று விளையாடிய இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் அணியில் சேர்க்கப்படவில்லை. அதன்பின் தற்போது அணியில் இடம்பிடித்துள்ளார்.

கேதர் ஜாதவ் ஐபிஎல் தொடரின்போது காயம் அடைந்தார். அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார்.

ALSO READ:  பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்ற இந்திய யு-19 இளம் அணி: பிரதமர் மோடி பாராட்டு!

Posts by ரேவ்ஸ்ரீ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + three =