தான் விமானத்தில் செல்லும்போது தீப்பெட்டியுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும், தன்னை யாரும் தடுத்ததில்லை என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிகாரிகள் விமான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதுடன், பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பினர். அப்போது விமானத்தினுள் தீப்பெட்டி போன்ற பொருட்களை எடுத்து வர அனுமதிக்கலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அந்தத் துறையின் அமைச்சர் அசோக் கஜபதி ராஜு, “எனக்கு புகைப்பழக்கம் உள்ளதால் நான் எங்கே சென்றாலும் தீப்பெட்டி அல்லது லைட்டருடன்தான் செல்வேன். ஆனால் விமானத்தில் ஏறும்போது, அவற்றை பறிமுதல் செய்துவிடுவார்கள். கடந்த ஆண்டு அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என்னை அதிகாரிகள் லைட்டர் அல்லது தீப்பெட்டியுடன் சென்றாலும் அனுமதிக்கின்றனர். இப்போது கூட எனது பையில் லைட்டர் இருக்கிறது. இங்கிருக்கும் செய்தியாளர்கள் எனது பேச்சை இப்போது பிரச்னையாக்க நினைப்பார்கள். ஆனால் நான் கூற வருவது என்னவென்றால், பாதுகாப்பு அம்சங்கள் அர்த்தமற்றதாக இருக்கக் கூடாது. உலகளவில் எங்கும் தீப்பெட்டியை உபயோகித்ததால் விபத்தும் ஏற்பட்டதாக தெரியவில்லை” என்றார். விமான பயணத்தில் தீயை உருவாக்கும் எந்தப் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த கூட்டத்தில் அமைச்சர் தெரிவித்த கருத்து அங்கிருந்தவரை அதிர்ச்சி அடைய வைத்தது.
விமானத்தில் தீப்பெட்டியுடன் தான் செல்வேன்; யாரும் தடுத்ததில்லை: அசோக் கஜபதி ராஜு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari