காதல் காதல்… 7ம் வகுப்பு மாணவியுடன் விஷம் குடித்த கணினி ஆசிரியர்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
poison 1 - 2026

மாணவியோடு சேர்ந்து விஷம் குடித்தார் ஆசிரியர்… பள்ளியில் இருந்து காரில் ஊர் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்று பிரச்னை ஆனதால்! எல்லாவற்றுக்கும்…. முறை தவறிய காதலே காரணம்!

ஏழாவது வகுப்பு படிக்கும் மாணவியுடன் சேர்ந்து அதே பள்ளியில் பணிபுரியும் கணினி வகுப்பாசிரியர் விஷம் குடித்தார். இருவரின் நிலையும் மோசமாக உள்ளது. விகாராபாதில் திங்களன்று இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட்டையில் ஓர் அரசு பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணிபுரியும் ஸ்ரீசைலம் என்பவர் ஏழாம் வகுப்பு மாணவியை காதலிப்பதாகக் கூறி பின் தொடர்ந்துள்ளார்.

திங்கள் கிழமை மதியம் பள்ளியில் இருந்து அந்த மாணவியை காரில் ஏற்றிக்கொண்டு விகாராபாதுக்கு வந்துள்ளார். அங்கே அவர்கள் இருவரும் பூச்சி மருந்து குடித்துள்ளனர். மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை அந்த வழியே சென்ற சிலர் கவனித்து விகாராபாத் மிஷனரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

teacher poisoned - 2026

அந்த மாணவியைத் தாம் காதலிப்பதாக மருத்துவரிடம் ஸ்ரீசைலம் கூறியதாகத் தெரிகிறது. மாணவியின் பெற்றோர் இந்தச் சம்பவம் குறித்து ஜோகிபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்!

அதே நேரம், ஶ்ரீசைலத்தின் பெரியப்பா ஜோகிபேட்டையில் அதிகாரத்தில் உள்ள கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் என்பது தெரிய வந்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.