
ஆர் டி சி பஸ்ஸின் பின் சக்கரங்களில் நசுங்கி இளைஞன் மரணம் அடைந்துள்ளார். ஹைதராபாத் ‘மலக்பேட்’ டில் நடந்த சாலை விபத்தில் ஒரு இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
பைக் மீது வேகமாக வந்து நிலைதடுமாறி ஆர்டிசி பஸ்ஸை இடித்ததால் இந்த விபத்து நேர்ந்தது. பஸ்ஸின் பின் சக்கரங்களின் கீழ் நசுங்கி அங்கேயே உயிர் பிரிந்தது.
விபத்துக்கு அதிவேகமே காரணம் என்று தெரிகிறது. அடிக்கடி அதே இடத்தில் விபத்துகள் நடப்பதாக அங்கு உள்ளவர்கள் தெரிவித்தனர். மரணித்தவர் ‘நாகோலை’ச் சேர்ந்த சந்திரசேகர் (20) என்று அறியப்பட்டது.
அவர் தன் கிளாமர் பைக் மீது மிக வேகமாகச் சென்று ‘தில்ஷுக்நகர்’ டிப்போவைச் சேர்ந்த ஆர்டிசி பஸ்ஸை பின்னாலிருந்து மோதினார் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மலக்பேட் ‘முசாராம்பாக் ‘ நாற்கூடலியில் நவ.12 செவ்வாய் காலையில் இந்த விபத்து நடந்துள்ளது. செய்தி அறிந்த மலக்பேட் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு வந்து உடலை போஸ்ட் மாற்றத்திற்கு உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.